

திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மற்றும் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் இன்று (9.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோட்டைகருங்குளம் துணை மின்நிலையத்தில் இன்று (9.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதன் காரணமாக பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் இன்று (9.7.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறயிருப்பதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அதன்படி திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் எஸ்.என். ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத்துறை ,கருப்பன்துறை, டவுன் கீழ ரத வீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம், மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்குதெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.