மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
Published on

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (5.1.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த இடங்களில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

அதேபோல் மூலைகரைப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (5.1.2026, திங்கள்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

அதன்படி மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com