

திருநெல்வேலி,
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும்.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ரவிராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரிசார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
களக்காடு, பணகுடி, கோட்டைகருங்குளம் மற்றும் திசையன்விளை துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
களக்காடு நகரம், பெருமாள்குளம், சாலைபுதூர், SN பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர்குறிச்சி, கோதைசேரி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம், வடுகச்சிமதில்.
பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம்.
கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம்.
திசையன்விளை, மகாதேவன்குளம், அப்புவிளை, ஆயன்குளம், நந்தன்குளம், செல்வமருதூர், எருமைக்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (9.9.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரத்தில் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை.
அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி.
மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம்.
கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி.
கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்தபேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.