மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மின்தடை.
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளியூர் கோட்டம்

வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நவலடி மற்றும் சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (28.10.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டபணை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம்.

மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com