மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், சங்கரன்கோவிலில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் கோட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கோட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்திதில் நாளை (20.11.2025, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
நாங்குநேரி, ராஜாக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் ஆகிய இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடுவக்குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை (20.11.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






