கோயம்பேடு மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மொபட் மோதி வாலிபர் பலி

கோயம்பேடு மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மொபட் மோதி வாலிபர் பலியானார்.
கோயம்பேடு மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மொபட் மோதி வாலிபர் பலி
Published on

ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 35). இவர், சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் கார் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். நேற்று வழக்கம்போல் தனது மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த தீனதயாளன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com