மரத்தில் மொபட் மோதி விவசாயி பலி

மரத்தில் மொபட் மோதி விவசாயி பலியானார்.
மரத்தில் மொபட் மோதி விவசாயி பலி
Published on

சோமரசம்பேட்டை போலீஸ் சரகம் கொய்யா தோப்பு கிராமம் புலியூரான்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தெய்வமணி (வயது 30).விவசாயி. இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தெய்வமணி நேற்று மாலை மொபட்டில் வியாழன்மேடு சென்று மதுஅருந்திவிட்டு மீண்டும் மொபட்டில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். எட்டரை வழியாக போசம்பட்டி என்ற இடத்தில் சென்றபோது மொபட் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com