

வேலூர் காட்பாடி காந்திநகரில் தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:- காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த 2 மனுக் கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை தமிழக அரசு ஏனோ தானோ என்று நினைத்துச் செயல்படுகிறது. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதார பிரச்சினை. காவிரி விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும்.இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்றால் அதையும் கூட்ட மறுக்கிறார்கள். ஆக சொந்த புத்தி இல்லாமல், சுயபுத்தி இல்லாமல் இருந்தால் ஆட்சி எப்படி நடக்கும். இப்படித்தான் நடக்கும்.
கள்ளக்குறிச்சி செய்தி உண்மையான செய்தின்னு இப்ப தெரியுது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பெண் கலெக்டருக்கு எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ் செய்தியை அனுப்புகிற அளவுக்கு ஒழுக்கமும், நாணயமும் கெட்டுபோயுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம்னு சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்குன்னு கேட்கிறீங்க. இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் போய் கேளுங்கள்.
தமிழ்நாட்டில் 6 சட்டமன்ற தொகுதிகள் காலியான தொகுதியாக அறிவித்து இருக்கிறார்கள். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் களமிறங்குவதற்கு வாய்ப்பு இருக்கான்னு கேட்கிறீங்க. இதனை தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேளுங்கள். அவர்தான் பதில் சொல்லனும். யாமறியேன் பராபரனே. அது கட்சி யின் முடிவு. ஒன்று கூடிதான் முடிவு எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.