மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

மதுரை,

மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,805 ஆக இருந்தது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,045ஆக உயர்ந்துள்ளது

இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இதுவரை 7,643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,953 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 210 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 200 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com