மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையால் உயர்கல்வியில் அதிகரிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்- அன்பில் மகேஷ் பெருமிதம்

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 1,320 ஆக உயர்ந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையால் உயர்கல்வியில் அதிகரிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்- அன்பில் மகேஷ் பெருமிதம்
Published on: 

சென்னை,

2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை அரசு பள்ளிகளில் படித்த 1,320 மாணவ-மாணவிகள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது முந்தைய ஆண் டுகளின் எண்ணிக்கையைவிட மிக அதிகம் ஆகும்.

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1,320 ஆக உயர்ந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான செய்தியை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திராவிட_மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையால் உருவாக்கப்பட்ட திட்டங்களில் “மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப்பள்ளி” திட்டமும் ஒன்று. தலைவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டங்களில் இதுவும் முக்கியமானது.

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களும் அதிக அளவில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் சிறப்பான தாக்கத்தை முந்தைய கல்வியாண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1,320 என்ற அளவில் உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிலை என்றென்றும் தொடர வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com