விருதுநகரில் ஆய்வுக்கு அஞ்சி 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்


விருதுநகரில் ஆய்வுக்கு அஞ்சி 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்
x

கோப்புப்படம் 

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்கவிருந்தன.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உரிய அனுமதி பெற்று இந்த ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை 1-ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாலர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஜூலை 6-ஆம் தேதி கீழத்தாயில் பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து 15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் திங்கள்கிழமை ஆய்வு நடக்கவிருந்தன. இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்ததன் காரணமாக ஆய்வுக்கு அஞ்சி ஆலைகளை உரிமையாளர்கள் மூடி உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story