

சென்னை,
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழகத்தில் இன்று 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
* நிதித்துறை செயலாளராக லலிதா, இணை செயலர்களாக கமல் கிஷோர், பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* உயர் கல்வித்துறை ஆணையராக இருந்த சுந்தரவல்லி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குநராக இருந்த வினய் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விடுப்பில் இருந்து திரும்பி வந்த வந்தனா கார்க், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் லீலா அலெக்ஸ், வேலூர் மாவட்ட கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் பிரியா, ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விழுப்புரம் கூடுதல் கலெக்டர் ஜே.இ.பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இருந்த பி. ஆகாஷ், மதுரை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளராக அழகு மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திருச்சி மாநகராட்சி ஆணையர் எல்.மதுபாலன், நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநர் ஆனந்த் மோகன், திருநெல்வேலி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எம்.வீரப்பன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.