திருச்செந்தூர் கோவிலை சுற்றியிருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் கோவிலை சுற்றியிருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்
Published on

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாக பகுதியை சுற்றி இருந்த 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாளுக்கு நாள் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com