

சென்னை,
தமிழகத்தில் ஏரி, குளம் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மார்ச் 9ந்தேதி வரை சென்னை ஐகோர்ட்டு கெடு விதித்து உள்ளது.
இந்த உத்தரவின்படி, அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்து உள்ளது.