சென்னை முழுவதும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம் - மாநகராட்சி நடவடிக்கை

கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணி மற்றும் மழைநீர் வடிகாலில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கொசு ஒழிப்பு பணி
Published on: 

சென்னை,

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்த வீடுகள் தோறும் புகை பரப்புதல், மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கொசு ஒழிப்பு பணி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள்தோறும் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணி, மற்றும் மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பல்வேறு மண்டலங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-8க்குட்பட்ட கங்கை நகர், வார்டு-22க்குட்பட்ட வேதகிரி குறுக்குத் தெரு, மணலி மண்டலம், வார்டு-18க்குட்பட்ட பாரதியார் தெரு, மாதவரம் மண்டலம், வார்டு-31க்குட்பட்ட ஸ்ரீ லட்சுமி நகர் பிரதான சாலை, வார்டு-29க்குட்பட்ட சாந்தி காலனி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-92க்குட்பட்ட திருவள்ளுவர் சாலை, வார்டு-94க்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், 4 மற்றும் 5ஆவது தெரு, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-121க்குட்பட்ட திருவீதி அம்மன் தெரு, ஆர்.கே. சாலை, வார்டு-13க்குட்பட்ட பத்மநாபா தெரு, சேஷாசலம் தெரு, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-147க்குட்பட்ட ஸ்ரீனிவாச நகர், 1ஆவது தெரு, அடையாறு மண்டலம், வார்டு-174க்குட்பட்ட ஜீவரத்தினம் நகர் பிரதான சாலை, பெருங்குடி மண்டலம், வார்டு-187க்குட்பட்ட மடிப்பாக்கம், கோபால் தெரு வார்டு-188க்குட்பட்ட ராம் நகர், 8ஆவது தெரு, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட அன்னை சத்தியா நகர் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணி மற்றும் மழைநீர் வடிகாலில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X