மதுவை ஒழிக்க வேண்டும்: விஜய் முன்பு விருது பெற்ற மாணவியின் தாய் கண்ணீர் பேச்சு - வீடியோ

குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது என்று விஜய்யிடம் விருது பெற்ற மாணவியின் தாய் கூறினார்.
மதுவை ஒழிக்க வேண்டும்: விஜய் முன்பு விருது பெற்ற மாணவியின் தாய் கண்ணீர் பேச்சு - வீடியோ
Published on

சென்னை,

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர் மாணவராக இருந்தால் வைர மோதிரமும், மாணவியாக இருந்தால் வைர கம்மலும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா பூஞ்சேரியில் உள்ள 4 பாயிஸ்ட் ஷெரட்டன் ஓட்டலில் உள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுவர்,காஞ்சிபுரம்,அரியலூர்,கடலூர், கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி,சிவகங்கை,திண்டுக்கல்,தேனி,நாகப்பட்டினம், புதுக்கோட்டை,பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் மாணவ-மாணவிகள் 600 பேர் பங்கேற்றனர்.

இந்தநிலையில்,விழாவில் பரிசு பெற்ற ஒரு மாணவியின் தாயார் விஜய்யிடம் குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது. அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தனி ஆளாக போராடி என் மகளை சாதிக்க வைத்து இருக்கிறேன். மது முற்றிலுமாக ஒழிய வேண்டும் அண்ணா...என்று உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டே கூறினார். அவரை விஜய் தட்டிக்கொடுத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com