ஆட்டோ கவிழ்ந்து தாய்-மகன் பலி

மத்திகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து தாய்-மகன் பலியானார்கள்.
ஆட்டோ கவிழ்ந்து தாய்-மகன் பலி
Published on

மத்திகிரி:

தேவாலயம் சென்றனர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஅள்ளி அருகே உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி காவேரியம்மா (வயது 45). இவர்களுக்கு தியாகராஜ் (25), தேவராஜ் (20) என 2 மகன்கள் உள்ளனர். இதில் தியாகராஜ் மாற்றுத்திறனாளி ஆவார்.

அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையத்தில் தேவலாயத்திற்கு தனது மகன்களுடன் நேற்று முன்தினம் காவேரியம்மா சென்றார். அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தனது ஊருக்கு நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

தாய்-மகன் பலி

ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த இரும்பு கேட்டில் ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காவேரியம்மா மற்றும் அவரது மகன் தேவராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாற்றுத்திறனாளியான தியாகராஜ், ஆட்டோ டிரைவர் ரேவண்ணா ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தாய், மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com