கிருஷ்ணகிரி: பூட்டிய வீட்டிற்குள் தாய்-மகன் எரித்துக் கொலை - போலீசார் தீவிர விசாரணை

ஊத்தங்கரை அருகே வீட்டிற்குள் தாய்-மகன் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி: பூட்டிய வீட்டிற்குள் தாய்-மகன் எரித்துக் கொலை - போலீசார் தீவிர விசாரணை
Published on

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது 55). தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

2 வது மனைவி கமலா (50). இவருக்கு குரு (17) என்ற மகன் உள்ளார். இவர்கள் 2 பேரும் செங்கல்பட்டி கிராமத்தில் ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை அவர்களின் வீட்டில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

எரித்துக் கொலை

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் தாய்-மகன் 2 பேரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com