மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - நேர்முகத்தேர்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி -  நேர்முகத்தேர்வு எப்போது? டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
Published on

சென்னை,

தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், நேர்முகத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவியில் காலியாக உள்ள 110 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 2,176 பேரில் 785 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு 2018 ஜூன் 10 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படி 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்காமல் வெறும் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டிலும் பிறகு சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் நியமன நடைமுறைகளில் சுமார் 8 ஆண்டுகள் தடை நீடித்தது. இந்த தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், நேர்முகத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com