பூண்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 4 பேர் படுகாயம்

பூண்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பூண்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 4 பேர் படுகாயம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியர்களாக திருப்பூரை சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 19), சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் (39), தேனாம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (30) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பூண்டி நோக்கி அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அந்த மோட்டார் சைக்கிளை பூண்டியை அடுத்த திருப்பேர் கிராமத்தை சேர்ந்த சரத் (19) ஓட்டி வந்தார்.

இந்த விபத்தில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com