கால்வாயில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பலி

வேட்டவலத்தில் கால்வாயில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கால்வாயில் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து பட்டதாரி வாலிபர் பலி
Published on

வேட்டவலம்

வேட்டவலம் தேரடி வீதியை சேர்ந்தவர் சண்முகம். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மகன் அரிஹரன் (வயது 24), பொறியியல் பட்டதாரி.

இவர் நேற்று  இரவு அருகே உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இரவு 8.30 மணியளவில் வேட்டவலம் ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைத் தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த அரிஹரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த செய்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரிஹரனின் தந்தை சண்முகம் வேட்டவலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com