

75-வது சுதந்திர விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 ரயில் நிலையங்களில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு, துணை ஆணைய சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் மதுரையில் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியினர் விருதுநகர் ரயில் நிலையம் வந்தனர். விருதுநகர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை ஆய்வாளர் ராஜன் நாயர், சார்பு ஆய்வாளர் மலைப் பாண்டி ஆகியோர் வரவேற்றனர். பேரணியினர் ரயில்வே பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சாதனங்கள் குறித்து பொதுமக்களுக்கு வீடியோ காட்சி மூலம் விளக்கினர். இதனை தொடர்ந்து இப்பேரணியினர் தூத்துக்குடி, நெல்லை, செங்கோட்டை, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.