மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

வள்ளியூர் (தெற்கு):

நாங்குநேரி தெற்குத்தெருவை சேர்ந்தவர் பால்துரை (வயது 33). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் பால் மோட்டார் சைக்கிளை நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்தார். வேலை முடிந்து வீட்டிற்கு புறப்படுவதற்காக வந்த போது, மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com