மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
Published on

திசையன்விளை:

உவரி அருகே உள்ள குட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த சரவணன் (வயது 37). சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தை சேர்ந்த சுடலைக்கண் என்ற துரைராஜ் (35) என்பவர் ஆனந்த சரவணனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுடலக்கண்ணை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com