நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

துலுக்கர்பட்டி, சாஸ்தா சுடலை கோவில் அருகே நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று மணிகண்டன் மானூர் போலீசில் புகார் அளித்தார்.
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
Published on

நெல்லை மாவட்டம், மானூர், துலுக்கர்பட்டி, மேலத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பவர் 27.3.2025 அன்று சாஸ்தா சுடலை கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து மணிகண்டன் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் மானூர், வடக்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் (52) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை நேற்று (1.5.2025) கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com