மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.
மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
Published on

திசையன்விளை:

திசையன்விளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 63). இவர் கடந்த வாரம் அப்புவிளையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றபோது இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற திசையன்விளை தங்கம் திருமண மண்டபம் தெருவை சேர்ந்த சுடலையாண்டி (40) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கபடி போட்டி நடந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com