சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Published on

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்புசெட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்கு 3 ஏக்கர் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட் மாற்றுவதற்கும் அல்லது புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 எச்.பி. வரை) மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2021-2022 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயிக்கான தாசில்தார் சான்று, மின் இணைப்பு சான்றின் நகல், வங்கி புத்தகத்தின் முதல் பக்க ஒளிம நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களை பெற நாமக்கல் மாவட்ட விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com