நாளை முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் மலை ரெயில் சேவை

கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
நாளை முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் மலை ரெயில் சேவை
Published on: 

நீலகிரி,

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி, நீலகிரி மலை ரெயில் சேவை நாளை முதல் (19.11.2026) தொடங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள்

கடந்த மாதம் 23-ம் தேதி பெய்த கனமழையால், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தின் மீது பெரிய பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்தது. இந்த மண்சரிவு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கடந்த 13-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்காலிக ரத்து

இந்த நிலையில் நீலகிரி மலை ரெயில் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் (ஊட்டி) இடையே இயக்கப்படும் குறிப்பிட்ட நீலகிரி மலை ரெயில் (NMR) சேவைகள் கடந்த 14-ம் தேதி முதல் இன்று (18.11.2026) வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

மீண்டும் சேவை

இந்நிலையில் ரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி, நீலகிரி மலை ரெயில் சேவை நாளை முதல் (19.11.2026) மீண்டும் தொடங்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

26 நாட்கள் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தநிலையில், சேலம் கோட்ட ரெயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

X