

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் மம்மன், மேலாண்மை இயக்குநர் ராகுல் மம்மன் ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முதலீடுகள் குறித்தும் பேசினார்கள்.
அப்போது, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் எம்.ஆர்.எப். கிரிக்கெட் பேட்டையும் பரிசளித்தனர். இதேபோல், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரபிக் அகமது, முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து, தமிழ்நாட்டில் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்தும், தோல் அல்லாத காலணித் தயாரிப்பில் அந்நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.