சேறும், சகதியுமாக காணப்படும் சாலை

தில்லைவிளாகம்- ஜாம்புவானோடை இடையே சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேறும், சகதியுமாக காணப்படும் சாலை
Published on

தில்லைவிளாகம்:

தில்லைவிளாகம்- ஜாம்புவானோடை இடையே சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணைப்பு சாலை

முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகம் மற்றும் ஜாம்புவானோடை ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, இரண்டு ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்கள் சென்று வருகின்றனர்.

தற்போது இந்த சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலை பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

சேறும், சகதியுமாக...

மழை காலங்களில் இந்தசாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையில் செல்லும் சேற்றில் வழுக்கி விழுகின்றனர்.

இந்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com