முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் நெரிசல் குறையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம்இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள், நடந்துனர்கள் தங்குவதற்காக அறைகள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும். என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com