முதுமலை ஜீப் சவாரி; மாலை 5.30 மணிக்கு பின்பு அனுமதிக்க கூடாது - வனத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முதுமலை ஜீப் சவாரி; மாலை 5.30 மணிக்கு பின்பு அனுமதிக்க கூடாது - வனத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜீப் சவாரிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நள்ளிரவில் விலங்குகளை தாக்குவது போல ஜீப் ஓட்டுனர்கள் அத்துமிறலில் ஈடுபடுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்தனர்.

முதுமலையில் பதிவு செய்யப்பட்ட ஜீப்களில் மட்டுமே சுற்றலா பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், அதிகாலை 6 மணிக்கு முன்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், மாலை 5:30 மணிக்கு பின்பு ஜீப் சவாரியை அனுமதிக்க கூடாது என்றும் வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com