வரும் 20-ந் தேதி முகரம் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

வருகிற 20-ந் தேதி முகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இஸ்லாமிய ஆண்டு, ஹிஜிரி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. ஹிஜிரி ஆண்டின் முதல் மாதத்தின் பெயர் முகரம். கடைசி மாதத்தின் பெயர் துல்ஹஜ் என்பதாகும்.

தற்போது ஹிஜிரி 1442-ம் ஆண்டு துல்ஹஜ் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நிறைவு பெறுவதைத்தொடர்ந்து, புதிய ஆண்டின் (1443) முதல் மாதமான முகரம் மாத பிறை நேற்று முன்தினம் (9-ந் தேதி) தென்படவில்லை.

இதையடுத்து ஹிஜிரி 1443 ஆண்டின் முகரம் மாதம் முதல் நாள் இன்று (11-ந் தேதி) முதல் தொடங்குகிறது. எனவே முகரம் 10-ம் நாள், முகரம் பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படும்.

மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி முப்தி சலாகுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com