முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது

விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது
முல்லைப்பெரியாறு அணை
Published on

கூடலூர்,

கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை

முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெரியாறு மற்றும் தேக்கடி ஆகிய அணை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

தொடர் நீர்வரத்து காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து 123 அடியை எட்டும் நிலையை நெருங்கியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 142 அடிகளாக உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்ட உயர்வு பாசனப்பகுதி விவசாயிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணையிலிருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சிஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வைகை அணை

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 34.06 அடியாக உள்ளது. 40 கன அடி நீர் வருகிறது. குடிநீர் திட்டங்களுக்காக 126 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 555 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 28.10 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 55.76 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. மஞ்சளாறு 4. உத்தமபாளையம் 5.8. கூடலூர் 5.6, பெரியாறு அணை 17, தேக்கடி 12.6, சண்முகாநதி 7.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com