ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்

அடையாறு மண்டலத்தில் 714 சதுர அடி பரப்பளவில் பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடம் -  மேயர்  பிரியா திறந்து வைத்தார்
Published on

சென்னை,

அடையாறு மண்டலத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-178, தரமணி, அண்ணா தெருவில் 178-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் 2024-25ம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்த பல்நோக்குக் கட்டடம் 714 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதனால் மகாத்மா காந்தி நகரைச் சார்ந்த பொதுமக்கள் பயனடைவர். இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், மாமன்ற உறுப்பினர் எஸ்.பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com