ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்

ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் பல்நோக்கு மையம் கட்டப்பட்டுள்ளது.
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் - மேயர் பிரியா திறந்து வைத்தார்
Published on

சென்னை,

திரு.வி.க.நகர் மண்டலம், நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு 78-க்குட்பட்ட நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை மேயர் பிரியா இன்று (16.07.2026) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்த கட்டடம் நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் மாமன்ற உறுப்பினர் 2024-25ம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com