சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்கிறார்

சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்கிறார்.
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்கிறார்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று(திங்கட்கிழமை) காலை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இதற்காக முனீஸ்வரர்நாத் பண்டாரி, நேற்று ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை சென்னை ஐகோர்ட்டு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com