'ஊராட்சி மணி' அழைப்பு மையம் - 26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
'ஊராட்சி மணி' அழைப்பு மையம் - 26-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!
Published on

சென்னை,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் 155 340 வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com