பணிமனையில் மாநகர பஸ் டிரைவர் சாவு

திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகில் உள்ள பணிமனை ஓய்வறையில் மாநகர பஸ் டிரைவர் இறந்தார்.
பணிமனையில் மாநகர பஸ் டிரைவர் சாவு
Published on

திருவொற்றியூர் சக்தி கணபதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 45). இவர், மாநகர பஸ்(தடம் எண் 28) டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து ஓய்வெடுப்பதற்காக அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகில் உள்ள பணிமனையில் உள்ள ஓய்வறையில் சென்று தூங்கினார். நீண்டநேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. அவர் அயர்ந்து தூக்கிக்கொண்டிருப்பதாக சக டிரைவர்கள் நினைத்து விட்டனர். ஆனால் இரவு ஆகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த சக டிரைவர்கள் எழுப்பியபோது சத்யமூர்த்தி இறந்து கிடந்தார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் போலீசார், டிரைவர் சத்யமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com