வண்டலூர் அருகே லாரி மோதி மாநகர பஸ் டிரைவர் பலி

வண்டலூர் அருகே லாரி மோதி மாநகர பஸ் டிரைவர் பலியானார்.
வண்டலூர் அருகே லாரி மோதி மாநகர பஸ் டிரைவர் பலி
Published on

லாரி மோதியது

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணசெல்வன் (வயது 43), மாநகர பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற லாரி அவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த சரவணசெல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் குணசேகரன் (வயது 42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com