நகராட்சித் தேர்தல் பாதுகாப்பு பணிகள்; கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சித் தேர்தல் பாதுகாப்பு பணிகள்; கமிஷனர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 150 நகராட்சிகளில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காவல்துறை தரப்பில் பாதுகாப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ளாட்சித் தேர்தலின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தின் 6-வது மாடியில் தேர்தல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் பாலசுப்பிரமணியத்தின் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த தேர்தல் பிரிவில் பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com