செக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை

செக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
செக் மோசடி வழக்கில் நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை
Published on

திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் பகுருதீன். இவர் முன்சீப் கோர்ட்டு தெருவில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் சக்திவேல் என்பவர் கடந்த 1.2.2013 அன்று ரூ.75 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுப்பதற்காக கடந்த 6.3.2013 அன்று திருத்துறைப்பூண்டியில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் காசோலையை சக்திவேல் கொடுத்தார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டில் பகுருதீன் வழக்கு தொடர்ந்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி அருண், சக்திவேலுக்கு 6 மாத சிறை தண்டனையும், நஷ்ட ஈடாக பகுருதீனுக்கு ரூ.75 ஆயிரமும் 2 மாதத்தில் வழங்க வேண்டும். தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com