ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்தவேலூர் பேரூராட்சி கூட்டம்

ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்த வேலூர் பேரூராட்சி கூட்டத்தில் 121 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்தவேலூர் பேரூராட்சி கூட்டம்
Published on

பரமத்திவேலூர்

வேலூர் பேரூராட்சி சிறப்பு கூட்டம், பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார். கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து ஒரு ஆண்டாக வேலூர் பேரூராட்சி மன்ற நிர்வாக குழு கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் 95 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் பெரும்பான்மையான பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை நிராகரித்ததால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மதுரா செந்தில், வேலூர் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரச தீர்வு ஏற்பட்டதின் பேரில் வேலூர் பேரூராட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 121 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் 121 தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 18 வார்டுகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com