கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..? - விவரம்

முரசு புயலால் இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..? - விவரம்
Published on: 

சென்னை,

கனமழை எச்சரிக்கை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முரசு பயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. முரசு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கே வங்கக்கடலில் 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று தீவிர புயலாக வலுவடைந்து தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, முரசு புயல் தெற்கு ஆந்திர கடலோரம் நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.

கனமழை

அதேவேளை, முரசு புயல் காரணமாக தமிழகத்திலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. மேலும், முரசு புயலால் இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X