தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அகரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஜெயராஜ் (வயது 68) என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் வேதக்கோவில் தெருவில் வைத்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அகரம் பகுதியைச் சேர்ந்தவரான துரைசாமி மகன் கணேசன்(61) என்பவரை ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று குற்றவாளியான கணேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு அரவிந்த் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com