நண்பருடன் சென்ற வாலிபரை கட்டையால் தாக்கி கொலை..! முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்..!

கடலூர் அருகே வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நண்பருடன் சென்ற வாலிபரை கட்டையால் தாக்கி கொலை..! முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்..!
Published on

கடலூர்:

பெண்ணாடம் அருகே வாலிபரை 11 பேர் கொண்ட கும்பல் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவித்துள்ளனர்.

வாலிபர் அடித்து கொலை

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்தில் கூடலூர் கிராமத்தை சேர்ந்த உதயராஜா ( 28 ). இவரது நண்பர் பெண்ணாடம் கருங்குழி தோப்பு பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு (30).

இவர்கள் இருவரையும் தொளார் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்து கீழே விழுந்து உள்ளனர். இதுகுறித்துஅப்பகுதி மக்கள் பெண்ணாடம் காலத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் உதயராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரது நண்பர் ஆனந்தபாபு படுகாயத்துடன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முதற்கட்ட விசாரணை

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தொளார் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பவல்லி என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் இருவருக்கும் தொடர்பு இருந்து வந்தது. தர்மராஜ் அந்த பெண்ணுக்கு 5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் பாபுக்கு புஷ்பவல்லிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த தர்மராஜ் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு ஆனந்தபாபு அந்த பணத்தை தான் தருவதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நண்பனை தாக்குதல்

இந்நிலையில் நேற்று தர்மராஜ் உட்பட 11 பேர் கொண்ட கும்பல் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஆனந்தபாவிற்கு தொலைபேசி மூலம் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர் .

இதனால் ஆனந்தபாபு இவரது நெருங்கிய நண்பரான உதய ராஜாவை அழைத்துக்கொண்டு பெண்ணாடம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென பதினோரு பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்துள்ள உருட்டுக்கட்டையால் ஆனந்த பாபுவை தாக்கியுள்ளனர்.

உதய ராஜா நண்பனை அடிக்க வேண்டாம் என கூறி தடுத்துள்ளார். நீ யார் கேட்கிறாய் என கூறி கடுமையாக அவரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த உதயராஜாவை பார்த்துவிட்டு அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று உள்ளது.

11 பேர் கொண்ட கும்பல்

இது சம்பந்தமாக 11 பேர் கொண்ட கும்பலில் 3 சிறுவர்களும் உள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி 4 பேரை தவிர வேறு 7 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com