

சென்னை,
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பெரும் வேதனையை அளிக்கிறது. காவல்துறையினர் பல்வேறு விசாரணை மற்றும் சிசிடி காட்சிகள் வைத்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கை விரைந்து முடித்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் இனி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.