திருச்செந்தூரில் குல்பி ஐஸ் வியாபாரி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் மது அருந்தியபோது, வாலிபர் ஒருவரின் மனைவி குறித்து அவதூறாக பேசிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த குல்பி ஐஸ் வியாபாரியை அந்த வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்தார்.
திருச்செந்தூரில் குல்பி ஐஸ் வியாபாரி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Published on

ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் தாரகா (வயது 28), திருச்செந்தூரில் தங்கி குல்பி ஐஸ்கிரிம் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் நண்பருமான கந்தசாமி(25) என்பவருடன் கடந்த 17.5.2023 அன்று திருச்செந்தூர் ராஜீவ்கண்ணாநகரில் வைத்து மதுஅருந்தியுள்ளார். அப்போது கந்தசாமியின் மனைவி குறித்து வினோத்தாரகா அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கந்தாசாமி, வினோத்தாரகாவை கல்லால் தாக்கி கொலை செய்தார். இதனையடுத்து இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று கந்தசாமி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. இன்னோஷ்குமார் மற்றும் திருச்செந்தூர் காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் (தற்போது CSCID கோயம்புத்தூர்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் கொலை வழக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com