மயிலாடுதுறையில் வாலிபர் சங்க நிர்வாகி படுகொலை: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
மயிலாடுதுறையில் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் வைரமுத்து மரணத்திற்கு நீதி கேட்டும், ஜாதி ஆணவ படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தூத்துக்குடி சிதம்பரநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்கம் மாவட்ட நிர்வாகி ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுரேஷ், எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் ராம்குமார், டிஒய்எப்ஐ மாவட்ட நிர்வாகிகள் நேசமணி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கம் பாலமுருகன், தெய்வநாயகம் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் சாம், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






