கொலை மிரட்டல் வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

இடப்பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக திசையன்விளையைச் சேர்ந்த ஒருவரை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கொலை மிரட்டல் வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
Published on

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே கடந்த 2024-ம் ஆண்டு, இடப்பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக திசையன்விளையைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (வயது 36) என்பவரை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அருள்பிரசாத்(43) என்பவர் அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, வள்ளியூர் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றவாளியான அருள்பிரசாத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் இன்று குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,500 அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், திசையன்விளை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் சிங், இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ( தற்போது மதுரை மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த காவலர் சபரி செல்வா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ராமநாராயண பெருமாள் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com